பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீர் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீர் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர் இதில் பலி எண்ணிக்கை தற்போது வரை 10 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர் இதில் பலி எண்ணிக்கை தற்போது வரை 10 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ தீவில் கடந்த 15ஆம் தேதி மிகப்பெரிய அதிர்வுகள் உண்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் அறிவுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் இருக்கும் மிண்டானாவோ தீவில் உள்ள டவவோ நகரின் பகுதியிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அந்நகரில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், சந்தை கட்டிடங்கள் மற்றும் மின்சார அமைப்பகம் அனைத்தும் கடும் சேதமடைந்தது. இதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 150க்கும் மேலானவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 earthquake

மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சற்று முன்னர் வெளிவந்த தகவல் தெரிவிக்கிறது.

மிகப் பெரிய பள்ளி கட்டிடம் ஒன்று இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து இருப்பதால், அதில் பல குழந்தைகள் சிக்கித் தவித்து வருகின்றனர். 

முதல் கட்டமாக, பள்ளி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்டுஎடுக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் உள்ளே இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு மேல் ஆனதால் அங்கு சிலர் உயிர் இழந்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.