பிறவி பிணி அகற்றும் அஷ்டவராகி வழிபாடு 

 

பிறவி பிணி அகற்றும் அஷ்டவராகி வழிபாடு 

வராகி வழிபாட்டின் முக்கியத்துவங்களையும் அதன் மேன்மைகளை பற்றியும் பார்போம்.

விழுப்புரம் அடுத்த சாலாமேட்டில் அமைந்துள்ளது அஷ்டவராகி கோயிலாகும். வராகி தான் இந்த பூமாதேவி என்பதால், வராகி அம்மனை வழிபட்டாலே பிறவி பிணி அகலும்.

varahi

வராகி தாய் ராஜ ராஜேஸ்வரியின் குதிரை படைதலைவியாகவும், திருப்பதி அலமேலு மங்கா என்று அழைக்கப்படும் பத்மாவதி தாயின் அந்தப்புற காவல் தெய்வமாய் இருப்பவளே வராகி என புராணத்தில் கூறப்படுகிறது.

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாயானவள் நமது வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள். அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி,இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோர். சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் .

varahi

இந்த கோயிலில் அருள் ஆற்றலையும், அஷ்டமா சித்தியையும் தரும் மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி ஆக இந்த எட்டு வராகி தேவிகளும் தனி சந்நிதிகளில் அமைந்துள்ளனர் . 

விழுப்புரம் அடுத்த சாலாமேடு செல்லும் வழியில் அமைந்துள்ள இக்கோயிலில் வராகி சிலை அத்தி மரத்தால் 8 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ளது. இது வராகி அம்மனுக்காக கட்டப்பட்ட முதல் கோயிலாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது . 

varahi

இக்கோயிலில் வராகி அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் பஞ்சமியன்று பஞ்சமி பூஜை நடந்து வருகிறது. இந்த கோயிலில் காலை 9 மணி முதல் 11 மணி உச்சிகால பூஜையும் மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். 

varahi

எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

வராகியை வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம். எதிரிகளால் பாதிப்பு அடைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.