பிறவி கடனை உணர்த்தும் கழுதையின் கதை

 

பிறவி கடனை உணர்த்தும் கழுதையின் கதை

கழுதை கெட்டால் குட்டி சுவர் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை இப்படி சில பழமொழிகள் கூறி நாம் கேள்விப்பட்டது உண்டு ஆனால் இந்த கதையை படித்த பின்பு கழுதைக்கு தெரிந்த வாழ்க்கை மனிதருக்கு தெரியவில்லையே என்று தான் நாம் எண்ணுவோம்.

ஒரு ஊருக்கு புதிதாக வந்த குருவிடம் செல்வந்தர் ஒருவர் ஸ்வாமி இந்த ஊரிலே மிகப்பெரிய செல்வந்தன் நான் ஆனால் எவ்வளவு செல்வம் அடைந்தாலும் வாழ்வின் ரகசியத்தை என்னால் உணர முடியவில்லை அதை உணர்வதற்கு நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி நின்றார்.

donhkkj

குரு ஒரு சிறு புன்னகையுடன் மகனே உன் வீட்டின் அருகே யாரவது துணி துவைக்கும் வண்ணான் குடியிருக்கிறானா என்று செல்வந்தரிடம் குரு கேட்டார் .அதற்கு செல்வந்தர் ஆம் ஸ்வாமி என் வீட்டின் அருகிலே ஒரு வண்ணான் குடியிருக்கிறான் என்று அவருடைய கேள்விக்கு பதில் அளித்தான் .

குரு அப்படியானால் நாளை காலையிலிருந்து இரவு வரை உன் வீட்டின் திண்ணையில் அமர்ந்து அவன் என்ன என்ன செய்கிறான் என்று கவனித்து விட்டு நாளை மறுநாள் காலையில் என்னிடம் வந்து அவன் என்ன என்ன செய்தான் என்று சொல் வாழ்வின் ரகசியத்தை உனக்கு சொல்கிறேன் என்று கூறி ஆசிர்வதித்து செல்வந்தரை அனுப்பிவைத்தார் குரு.

 மறுநாள் பொழுது புலர்ந்ததும் வண்ணான் என்ன என்ன செய்கிறான் என்று ஆவலோடு பார்க்க திண்ணையில் வந்து அமர்ந்தார் செல்வந்தர்.வண்ணான் தன் காலைக்கடன்களை முடித்து விட்டு தான் வளர்க்கும் இரு கழுதைகளின் மேல் அன்றைக்கு துவைக்க வேண்டிய அழுக்கு துணிகளை மூட்டை கட்டி கழுதைகளின் மேல் வைத்து அவைகளை ஆற்று பக்கம் அழைத்து சென்றான்.

donkjhui

 செல்வந்தர் கவனமாக அதை பார்த்து வைத்து கொண்டார் பின் மாலை ஆனது அழுக்கு துணிகளை வெளுத்து காய வைத்து அவைகளை அதே போல் மூட்டைகட்டி கழுதைகளின் மேல் வைத்து அவைகளை வீட்டிற்கு அழைத்து வந்தான் .

செல்வந்தர் இதையும் கவனமாக குறிப்பெடுத்து கொண்டார் பின்னர் செல்வந்தர் கண்ணில் அவன் படவே இல்லை இரவு வேளையும் வந்து செல்வந்தர் தூங்கி விட்டார் பின் பொழுது விடிந்ததும் குளித்து முடித்து குருவை காண சென்றார் .

குருவை வணங்கிவிட்டு ஸ்வாமி நீங்கள் கூறியது போல் வண்ணானை ஒரு நாள் முழுவதும் கண்காணித்தேன் ஆனால் அவன் இருமுறை மட்டுமே என் கண்களில் பட்டான் காலையில் அழுக்கு துணிகளை மூட்டை கட்டி இருக்கழுதைகளின் மேல் ஏற்றி சென்றான் .

மாலையில் அதே துணிகளை துவைத்து உலர்த்தி காயவைத்து மூட்டைகளாக கட்டி அதே இரு கழுதைகளின் மேல் ஏற்றி வந்தான். அதோடு சரி அவன் என் கண்ணில் படவில்லை ஸ்வாமி. குரு நன்று மகனே துணி மூட்டைகளை சுமந்த இரு கழுதைகளையும் கவனித்திருப்பாய் அல்லவா செல்வந்தர் ஆம் ஸ்வாமி கவனித்தேன் .

donjjnk

குரு காலையில் அழுக்கு துணிகளை முதுகில் சுமந்த கழுதைகளுக்கும் மாலையில் வெளுத்த துணிகளை சுமந்த கழுதைகளுக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் உணர்ந்தாயா. செல்வந்தர் இல்லை ஸ்வாமி காலையில் எப்படி கழுதைகள் மூட்டைகளை சுமந்து சென்றனவோ அப்படியேதான் மாலையிலும் மூட்டைகளையும் சுமந்து வீடு திரும்பின .குரு மகனே நீ பார்த்த கழுதையின் செயல் தான் மனித வாழ்வின் ரகசியம்.செல்வந்தர் புரியவில்லை ஸ்வாமி விளக்கமாக கூறுங்கள் என்றார்.

குரு மகனே காலையில் அழுக்கு துணிகளை சுமந்த இரு கழுதைகளும் ஐயோ அழுக்கு துணிகளை சுமக்கிறோமே என்று வருத்தமும் கொள்ளவில்லை அதே போல் மாலையில் சுமந்த துணிகளை ஆஹா வெளுத்த சுத்தமான துணிகளை சுமக்கிறோமே என்று சந்தோஷமும் கொள்ளவில்லை அழுக்கு துணியோ சுத்தமான துணியோ சுமப்பது நம் பிறவி கடன் என்று எண்ணித்தான் சுமக்கிறது.

 

donirk

அதே போல்தான் ஒவ்வொரு மனிதனும் துன்பம் வந்தால் கலங்காமலும் இன்பம் வந்தால் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்யாமலும் இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்று உணர்ந்து இந்த இரு விஷயத்தையும் சுமப்பது நம் பிறவி கடன் என்று எண்ணி வாழ்வதே வாழ்வின் ரகசியம் என்று குரு கூறி முடிக்க செல்வந்தர் தெளிவுற்றார்.