பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமி! – சீமான் பேட்டி

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமி! – சீமான் பேட்டி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 21வது நாளாக நடந்து வந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தன்னுடைய ஆதரதவை தெரிவித்துக்கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று கூறியதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 21வது நாளாக நடந்து வந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தன்னுடைய ஆதரதவை தெரிவித்துக்கொண்டார்.

epsadmk

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
“என்.பி.ஆர்-க்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று என்னிடம் கூறினார். பிரதமருக்கும் கூட பிறப்புச் சான்றிதழ் இருக்காது. சி.ஏ.ஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது இல்லை, ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. ஒட்டுமொத்த மக்களும் முகாமுக்கு செல்ல வேண்டிய நிலை வரும். இந்தியாவுக்கு இதற்கு மேல் அகதியாக வருபவர்களுக்கு குடியுரிமை தர வேண்டாம். ஆனால், இதற்கு முன்பு வந்தவர்களுக்கு, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தரமாட்டோம் என்று கூறுவது பாசிசம்” என்றார்.