பிறந்த ராசிப்படி ‘தளபதி’ விஜய் இந்த ஆண்டில் சிறப்பாக விளங்குவாரா?

 

பிறந்த ராசிப்படி ‘தளபதி’ விஜய் இந்த ஆண்டில் சிறப்பாக விளங்குவாரா?

போராடி வெற்றிபெறும் பண்பை கொண்ட கடக ராசிக்காரர் என்பதை எப்போதுமே நடிகர் விஜய் நிரூபித்துக் கொண்டே இருப்பார்

போராடி வெற்றிபெறும் பண்பை கொண்ட கடக ராசிக்காரர் என்பதை எப்போதுமே நடிகர் விஜய் நிரூபித்துக் கொண்டே இருப்பார்.இந்தாண்டு அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும். அமுக்குனி போன்று அமைதியாக இருந்தாலும் மென்மையான குணம் படைத்தவர்கள் கடக ராசிக்காரர்கள். அதுபோல கடினமாகத் தோன்றினாலும் நடிகர் விஜய்யின் உள்ளம் பூப்போன்று மிக மென்மையானது.

vijay

உதவும் எண்ணம் நிறைந்தவர் விஜய் என்பது அவரது செயல்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரால் மிருகத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாரை எந்த விளம்பரமும் இல்லாமல் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

vijay

அத்துடன் சிலரது குடும்பத்துக்கு வேண்டிய பொருளாதார உதவிகளையும் விஜய் வழங்கினார்.தொடக்கத்தில் பெரிய வெற்றிகளைக் குவிக்காவிட்டாலும் வசூலில் படத் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்த நடிகர் விஜய் இப்போது திரையுலகில் சக்கைப்போடு போடுகிறார்.

முருகதாஸ் இயக்கிய ‘சர்க்கார்’ படத்தில் அரசியல்வாதிகளையெல்லாம் தெறிக்க விட்ட நடிகர் விஜய் அடுத்ததாக அட்லியின் இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் அள்ளு விடப் போகிறார் என்று இப்போதே அவரது ரசிகர்கள் ஒரே குஷியாக இருக்கின்றனர். இந்த ஆண்டு வெளியாகும் தளபதி 63 படம் மெகா ஹிட்டாக விஜய்க்கு அமையும் என இயக்குநர் அட்லி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

vijay

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு என்றால் அது விஜய்தான். அதை இந்தாண்டும் அவர் செய்து காட்டுவார்.கடக ராசிக்காரரான நடிகர் விஜய்க்கு ஏற்ற நிறம்- க்ரீம்.
ஏற்ற எண்கள்- 5, 9.