‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ : நடிகர் திலகம் சிவாஜிக்கு கமலின் வாழ்த்து இதோ!

 

‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ : நடிகர் திலகம் சிவாஜிக்கு கமலின் வாழ்த்து இதோ!

தமிழ் சினிமாவையும் தாண்டி மக்களின் மனம் கவர்ந்த ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92 வது பிறந்தநாளுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

sivaji

தமிழ் சினிமாவையும் தாண்டி மக்களின் மனம் கவர்ந்த ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். தமிழின் பெருமையையும் புகழையும் உலகிற்கு பல கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தவர்.  நடிகர் திலகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட சிவாஜியின் 92 வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

sivaji

இதன் காரணமாகச் சிவாஜியின் பிறந்தாளுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு  தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து அவரை போற்றி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் சிவாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நடிகர் திலகத்தின் நடிப்பை போல அவரது உடலுக்கும் மரணமே கிடையாது என மற்ற அப்பாவி ரசிகர்களை போல நானும் நம்பினேன். அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவரின் ஏராளமான ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, அவர் நம்முடன் இல்லையே என்ற எண்ணத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’  என பதிவிட்டுள்ளார்.