பிறந்த நாள் கொண்டாடும் வைகை புயல்: டிரெண்டாகும் #HBDMCsThalaivanVadivelu ஹேஷ்டாக்!

 

பிறந்த நாள் கொண்டாடும் வைகை புயல்: டிரெண்டாகும் #HBDMCsThalaivanVadivelu ஹேஷ்டாக்!

தமிழ்நாட்டின் ஆஸ்தான நடிகர் என்று சொல்வதை விட சோஷியல் மீடியாவின் தி ஒன் அன்ட் ஒன்லி அல்டிமேட் தலைவர் என்றால் அது வடிவேலு தான்.

தமிழ்நாட்டின் ஆஸ்தான நடிகர் என்று சொல்வதை விட சோஷியல் மீடியாவின் தி ஒன் அன்ட் ஒன்லி அல்டிமேட் தலைவர் என்றால் அது வடிவேலு தான். இன்றைய காலகட்டத்தில் வடிவேலு இல்லாமல் சோஷியல்  மீடியாவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சோஷியல் மீடியாவில் வடிவேலு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

vadivelu

ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக் , ஒருநாள் அல்லது இரண்டு நாள் தான் டிரெண்டிங்கில் இருக்கும். ஆனால், `வடிவேலு ஃபார் லைஃப்’ என்ற ஹேஷ்டேக் எப்பவும் டிரெண்டிங்  தான். இன்னும் அவரது பாணியில் சொல்ல போனால் எண்டு கார்டு போட்டு எகத்தாளமாடா பண்ணுறீங்க அவருக்கு  எண்டே கிடையாதுடா என்று சொல்லலாம்.

vadivelu1

அந்த அளவுக்கு வடிவேலுக்கு ரசிகர்கள் அதிகம், வெறியர்கள் அதிகம், காதலர்களும் அதிகம். கந்தன் கருணை படத்தின் சூரனாக வரும் அசோகன் ஒரு இடத்தில் பேசும் போது , ‘இந்த சூரன்  பெயரைக் கூறாமல் கந்தன் வரலாற்றை எந்தக் கவிஞனாலும்  எழுத முடியாது’ என்று சொல்வார். அப்படி தான் சமூக வலைதளங்களில் வடிவேலுவைத் தவிர்த்து `மீம்ஸ்’ யை  எவராலும் உருவாக்கவே  முடியாது.

ஒருவரைக் கிண்டல் செய்யவும் வடிவேலு தேவைப்படுகிறார் அல்லது வார்த்தையே இல்லாமல் முக பாவனையில் பதிலடி கொடுக்கவும் வடிவேலு தேவைப்படுகிறார். அந்த அளவுக்கு வடிவேலு என்றால் சோஷியல்  மீடியா, சோஷியல் மீடியா என்றால் வடிவேலு என்று மாறி விட்டது. 

vadivelu2

இங்குப் பலர் தங்கள்  சொந்த கருத்தைப் பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். மாறாக வடிவேலுவின் டயலாக்குகளை தான் தேவைப்படும் இடத்தில் சரியான நேரத்தில் சொல்லி காமெடியனாக  மாறி வருகின்றனர்.

 

vadivelu

அதே போல் தமிழ் சினிமாவில் பஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர்  என எது வந்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் கண்டிப்பாக வடிவேலு வெர்சன் வரும். நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னையே மட்டப்படுத்தி  கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர் வைகை புயல் வடிவேலு. சூனாபானா, வண்டு  முருகன், கைப்புள்ள, நாய் சேகர், அலாட்டு ஆறுமுகம், ஏட்டு ஏகாம்பரம் என ஏகத்துக்கும் பல வேடங்களில் நடித்து  மக்கள் மனதில் ஒன்றி போய் உள்ள தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின்  வடிவேலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதில் பெருமை கொள்கிறது டாப் தமிழ் நியூஸ்.