பிறந்த நாள் கொண்டாடிய பிக் பாஸ் ஐஸ்வர்யா: இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு: என்ன செய்தார் தெரியுமா?

 

பிறந்த நாள் கொண்டாடிய பிக் பாஸ் ஐஸ்வர்யா: இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு: என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ்  ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் நடிகர் சிம்பு அவரது நெருங்கிய நண்பர்களுடன் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னை: பிக்பாஸ்  ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் நடிகர் சிம்பு அவரது நெருங்கிய நண்பர்களுடன் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டபோதும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை சென்றார். 

 

இதையடுத்து  நிகழ்ச்சி முடிந்த பின்பு  நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக நடிகர் சென்ராயன் கூறியிருந்தார். சமீபத்தில் தனது பிறந்தநாளை நடிகர் சிம்பு, அனிருத், மஹத் ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.