பிறந்த நாள் அன்று லோக்கலாக களமிறங்கிய சிவகார்த்திகேயன்!

 

பிறந்த நாள் அன்று லோக்கலாக களமிறங்கிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று Mr.லோக்கல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று Mr.லோக்கல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல்.கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். காமெடி என்டேர்டைன்மெண்டாக உருவாகிவரும் இப்படத்தில்  யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று இப்படத்தின் டீஸர் வெளியானது.  என் பெயர் மோகன் செல்லமாக Mr.லோக்கல் என்ற வசனத்தின் மூலம் டீசரில் சிவகார்த்திகேயன் எண்ட்ரி அமைந்துள்ளது. டீஸரில் நயன்தாராவும், சிவாவும் மோதிக் கொள்வது போல் அமைத்துள்ள இப்படத்தின் டீசரை பார்த்த  அவரது ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படம் ஹிட்டாகும் என்று கூறிவருகின்றனர்.