பிறந்த தேதி மற்றும் இடம் தொடர்பான ஆவணங்கள் இருந்தாலே போதும்! தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த சந்தேகத்துக்கு விளக்கம்

 

பிறந்த தேதி மற்றும் இடம் தொடர்பான ஆவணங்கள் இருந்தாலே போதும்! தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த சந்தேகத்துக்கு விளக்கம்

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும்போது, ஒருவரின் இந்திய குடியுரிமை நிரூபிக்க பிறந்த தேதி மற்றும் இடம் தொடர்பான ஆவணங்களை அளித்தாலே போதும். பெற்றோர்களின் எந்தவொரு ஆவணமும் தேவையில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிரானது மற்றும் பிளப்படுத்தும் மற்றும் பாரபட்சமானது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர். மேலும் அவற்றுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான சந்தேகங்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

அரசு தரப்பில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: 1971க்கு முந்தைய வம்சாவளியினருக்கு எந்தவொரு ஆவணமும் தேவையில்லை. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பயிற்சியின் போது இந்த நிபந்தனை பின்பற்றப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ஒருவர் தனது இந்திய குடியுரிமையை நிரூபிக்க அவரது பிறந்த தேதி மற்றும் இடம் தொடர்பான ஆவணங்களை வழங்கினாலே போதுமானதாக இருக்கும்.

பிறப்பு சான்றிதழ் (மாதிரி)

குடியுரிமை திருத்த சட்டம் என்பது தனி சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது வேறு நடைமுறை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபிறகு நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதேவேளையில், நாடு முழுமைக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.