பிறந்த குழந்தையின் தொடையில் 20 நாளாக இருந்த தடுப்பூசி! | அரசு மருத்துவமனையின் அலட்சியம்!

 

பிறந்த குழந்தையின் தொடையில் 20 நாளாக இருந்த தடுப்பூசி! | அரசு மருத்துவமனையின் அலட்சியம்!

நோயாளிகளிடம் அன்பாகவும், அக்கறையாகவும், மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல் சேவையாகவும் செய்து வருகிற மருத்துவர்களும், செவிலியர்களும் நாடு முழுக்க இருந்தாலும், வெகு சிலரின் மெத்தனப்போக்கால் மருத்துவ சேவையே கேள்விக்குறியாகி உள்ளது. கோவையின் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், மலர்விழி தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், சென்ற மாதம் 20-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் மலர்விழிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நோயாளிகளிடம் அன்பாகவும், அக்கறையாகவும், மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல் சேவையாகவும் செய்து வருகிற மருத்துவர்களும், செவிலியர்களும் நாடு முழுக்க இருந்தாலும், வெகு சிலரின் மெத்தனப்போக்கால் மருத்துவ சேவையே கேள்விக்குறியாகி உள்ளது. கோவையின் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், மலர்விழி தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், சென்ற மாதம் 20-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் மலர்விழிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்தவுடனேயே போடப்பட வேண்டிய தடுப்பூசியை அடுத்த நாளான 21-ஆம் தேதி போட்டிருக்கிறார்கள். அதன் பிறகு கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் மலர்விழி. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்று குழந்தையினை குளிப்பாட்டும் போது, அவரது கைகளில் ஏதோ பட்டு, கையில் இருந்து ரத்தம் வரவே, சந்தேகப்பட்டு என்னவென்று குழந்தையின் உடலைத் தடவிப் பார்த்திருக்கிறார்.

baby

அப்போது, குழந்தையின் இடது தொடையில் போடப்பட்ட தடுப்பூசியை செவிலியர்கள் கவனக்குறைவால், அகற்றாமல் விட்டு விட்டதைக் கண்டு மலர்விழி அதிர்ந்தார். குழந்தையின் தொடையில் ஊசி உள்ளேயே குத்திக் கொண்டு இருந்திருக்கிறது. இதன் காரணமாகத் தான் குழந்தையின் தொடையில் வீக்கம் உண்டானதோடு, நாளடைவில் வீக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொண்டார். அதன் பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடமும், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏனையோரிடமும் மலர்விழியின் தரப்பில் இருந்து, செவிலியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.