பிறந்த குழந்தைக்கு ஆரோக்கியம் தரும் மரப்பாச்சி பொம்மைகள்

பிறந்த குழந்தைக்கு ஆரோக்கியம் தரும் மரப்பாச்சி பொம்மைகள்

இன்று முதல் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான தடை முழு வீச்சில் நடைமுறைக்கு வரத் தொடங்கி விட்டது. யாராவது ‘இது தவறு’  என்று கெடுபிடி பண்ணாமல் நாம் எதையுமே கேட்பதில்லை. நம் தலைமுறை வரையில் குழந்தைகள் விளையாட அபூர்வமாகத் தான் பிளாஸ்டிக், ரப்பர் விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. உலகமயமாக்கலுக்குப் பிறகு, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் ஆரம்பித்து கல்விக்கான ரப்பர், பென்சில் வரையில் எல்லாவற்றிலும் விதவிதமான கலர்களில், பிளாஸ்டிக். கெமிக்கல், பாய்ச்சன் பொருட்கள் வந்து விட்டன.

toys

சத்தான சாப்பாடு கொடுப்பதும், தரமான பெரிய பள்ளிகளில் சேர்ப்பதும் மட்டுமே நல்ல பெற்றோருக்கு அடையாளமா… நிச்சயமாக கிடையாது. சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு, அவர்களின் உடல் நலன் மேல் அக்கறைக் கொள்ள நாம் தான் சொல்லித் தர வேண்டும்.
பிறந்த நான்காவது மாதத்திலிருந்தே, குழந்தைகள்.. கைக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் வைத்துப் பழக ஆரம்பிக்கும்.  அது பிளாஸ்டிக்காக இருக்கும் பட்சத்தில் அதோட ஆரோக்கியத்துக்கு நாமும் சேர்ந்தே கேடு விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி அதுக்கு மாற்று என்ன? 
அவ்வாறு குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை வைக்கும் பொழுது, நாம் பிடுங்கக் கூடாது. தவழ விடாத குழந்தைகள் எப்படி நடக்க சிரமப்படுமோ… அப்படி தான். குழந்தைகளை அவர்களின் இயல்பிலேயே விட வேண்டும். 

toys

‘முன்னொரு காலத்தில் மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன’ என்கிற அளவிலேயே நாம், நமது பாரம்பரியத்தைக் கடந்து வந்திருக்கிறோம். மரப்பாச்சி பொம்மைகளின் ஆரோக்கியத்தின் தத்துவம் அற்புதமாய் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. மரப்பாச்சி பொம்மைகள் செய்வதற்கு கருங்காலி மரத்தைத் தான் பயன்படுத்துவார்கள். இப்பொழுது கருங்காலி மரங்கள் குறைந்து போனதால் மரப்பாச்சி பொம்மைகளை வேறு மரங்களில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கருங்காலி மர கலர் வருவதற்கு அந்த கலர் பெயிண்ட் அடித்துவிடுகிறார்கள். அப்படியானால் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? அரசாங்க பூம்புகார் கடைகளில் இது கிடைக்கும். அவற்றிலும் சரியான கருங்காலி மர பொம்மையை எப்படி தேர்ந்தெடுப்பது?கருங்காலி மரம் கொஞ்சம் வாசனையான மரம். சந்தனம் மாதிரி ஒரு வாசம் வரும். ரொம்ப உறுதியாக இருக்கும். மரத்தை அரைத்தால் அடர் சிவப்பு நிறத்துல ஒருவித மாவு வரும். அதிகப்பட்சமாக முந்நூறு ரூபாய்களுக்குள் தான் வரும். 

toys

மரப்பாச்சி பொம்மையை வாங்கி வந்து, அதை நல்ல தண்ணீரில் கழுவி நகத்தால சுரண்டி பாருங்கள். போலி பொம்மையாக இருந்தால், பெயிண்ட் நகத்தோடு வரும். இந்த வகை பொம்மைகளை குழந்தைகள் வாயில் வைத்தால் நோய் எதிர்ப்பு சக்தி வளரும். சளி, இருமல் தொந்தரவு குறையும். குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
மரப்பாச்சி பொம்மைகள் பாரம்பரியமாக தாயிடமிருந்து மகளுக்கு சீதனமாக வழங்கப்பட்டு, அதைக்கொண்டே மகள் தன் வீட்டில் பொம்மை கொலு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கப்படும்போது அவை மருத்துவ தன்மையுடன் விளங்குகின்றன. குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சப்பும்போது மருத்துவ குணங்கள் உடலில் சேருகின்றன.

இனி உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாருக்காவது குழந்தைகள் பிறந்தால், பெரிய பெரிய அங்காடிகள், தடை செய்யப்பட்டிருக்கும் பேபி ஆயில், பவுடர்களை ஸ்டைலுக்காக வாங்கிச் செல்லாமல், ஆரோக்கியம் தரும் மரப்பாச்சி பொம்மைகளைப் பரிசாக எடுத்துச் செல்லுங்கள்.