பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

 

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 23லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 23லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 14,378லிருந்து 14,792ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 480லிருந்து 488ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2015 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர். 

coronavirus

இந்நிலையில் பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை கொரோனா பாதிப்பால் டெல்லியில் உயிரிழந்தது. கடந்த 14 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, இரண்டு தினங்கள் கழித்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்தியாவில், மிகக் குறைந்த வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட உயிரிழப்பு இதுவாகும். மகாராஷ்டிராவில், பிறந்து எட்டு நாள்களே ஆன குழந்தைக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.