பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்!

 

பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (டிச.12) சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (டிச.12) சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும், கோடான கோடி ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்தனர்.

இந்நிலையில், பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டில், வாழ்த்திய அனைத்து திரையுலக நண்பர்கள், ஊடடக நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.