‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ – சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

 

‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ – சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மும்பை: திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு அவரது கோடான கோடி ரசிகர்களும், திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக அறியப்படும் சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா.. ஆரோக்கியமும், ஆசிர்வாதமும் நிறைந்த சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திடும்” என தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் ரஜினி, “மிக்க நன்றி சச்சின். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.