பிறந்தநாளின்போது துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டாம் – பிரிட்டன் ராணி எலிசபெத்

 

பிறந்தநாளின்போது துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டாம் – பிரிட்டன் ராணி எலிசபெத்

தன்னுடைய பிறந்தநாளின்போது துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டாம் என பிரிட்டன் ராணி எலிசபெத் கேட்டுக் கொண்டார்.

லண்டன்: தன்னுடைய பிறந்தநாளின்போது துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டாம் என பிரிட்டன் ராணி எலிசபெத் கேட்டுக் கொண்டார்.

பிரிட்டன் ராணி எலிசபெத் தன்னுடைய 95-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில், தனது பிறந்த நாளைக் குறிக்க துப்பாக்கியால் சுட்டு மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கும் நிகழ்வை தவிர்க்க வேண்டும் என பிரிட்டனின் ராணி எலிசபெத் கேட்டுக் கொண்டார். ஐடிவி நியூஸின் நிருபர் ட்விட்டரில் கூறுகையில், கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இவ்வாறு தனக்கு வணக்கம் செலுத்துவது பொருத்தமாக இருக்காது என ராணி எலிசபெத் நினைக்கிறார்.

பொதுவாக அரச குடும்பத்தினரின் ஆண்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா போன்ற சிறப்பு நிகழ்வுகளை குறிக்க வெற்று சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிப்பது லண்டன் முழுவதும் பல்வேறு இடங்களிலில் வாடிக்கையாக நடைபெறும் நிகழ்வாகும்.

UK Queen

நிருபர் கிறிஸ் ஷிப் பக்கிங்ஹாம் அரண்மனை ஆதாரத்தை மேற்கோளிட்டுக் கூறுகையில், “தற்போதைய கொரோனா சூழ்நிலையில் துப்பாக்கி வணக்கங்களை அனுமதிக்க சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதில் அவரது மாட்சிமை தெரிகிறது. 68 ஆண்டு ஆட்சியில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இதுபோன்ற கோரிக்கை விடுப்பது இதுவே முதல் முறை” என்றார்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை 14,576 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் இதுவரை 108,692 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.