பிரைம் மினிஸ்டருக்கு ஹெல்ப் பண்ணுங்க.. தனது உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த 2 வயது சிறுமி!

 

பிரைம் மினிஸ்டருக்கு ஹெல்ப் பண்ணுங்க.. தனது உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த 2 வயது சிறுமி!

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் மொத்தமாக 37,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் மொத்தமாக 37,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில்  7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  1,65,035 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 67 பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

TTN

இந்நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பட்டயக் கணக்காளர் ரகுநாதன் என்பவரின் இரண்டரை வயது மகள் ஸ்பூர்த்தி தனது உண்டியல் சேமிப்பை வழங்கியுள்ளார். பிரதமரும் முதல்வரும் நிதியுதவி கேட்பதை டிவியில் பார்த்த அந்த சிறுமி.. என்னாச்சு பா? என்று ரகுநாதனிடம் கேட்டுள்ளார். 

TTN

அதற்கு ரகுநாதன், கொரோனா வைரஸ் பற்றி ஸ்பூர்த்தியிடம் கூறியவுடன் யாரையும் தொடக் கூட விடாத அவளின் உண்டியலை எடுத்து அதிலிருந்த பணத்தை பிரதமருக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன் படி, பிரதமரின் பேரிடர் திட்டத்துக்கு ரூ.2,220 மற்றும்  முதல்வரின் நிவாரண நிதி திட்டத்துக்கு ரூ.2,220ம் ரகுநாதன் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். 2 வயது சிறுமி, நிவாரண நிதிக்கு பணம் கொடுத்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.