பிரேசில் படத்துக்கு முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கான விருது

பிரேசில் படத்துக்கு முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கான விருது

கேன்ஸ் உலக திரைப்பட விழா இந்த வருடம் மே 14ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது. பல்வேறு பிரிவுகளின்கீழ் திரையிடப்படும் உலகின் தலைசிறந்த படங்களை பார்ப்பதற்காகவும், ஹாலிவுட் துவங்கி போஜ்புரி ஹீரோயின்கள் வரை அனைத்து நட்சத்திரங்களையும் ஒரே இடத்தில் காண உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் கேன்ஸுக்கு வருவது வழக்கம்.

Karim Ainouz

உலக திரைப்பட ரசிகர்களின் சொர்க்கபுரியான கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘தி இன்விசிபிள் லைஃப் ஆஃப் யுரிடிஸ் குஸ்மாவொ” என்ற பிரேசில் திரைப்படத்துக்கு, ‘முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கான’ விருது வழங்கப்பட்டுள்ளது. அதென்ன முற்றிலும் புதிய கோணத்திற்கான விருது? பெயரில் இருப்பதுபோலவே, மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்படும் படங்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.

The Invisible Life of Euridice Gusmao

பிரேசிலில் 1950களில் நிலவிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் இரு சகோதரிகளைப்பற்றிய பீரியட் படமான மேற்படி படத்தை இயக்கியவர் கரீம் அய்னூஸ். விருதை பெற்றுக்கொண்ட கரீம் கூறியது கவனிக்கத்தக்கது. “சகிப்புத்தன்மை குறைந்து வரும் இக்காலகட்டம் பிரேசிலின் மிகமிக மோசமான காலகட்டம்” என கூறியிருக்கிறார். இதேபோன்ற கருத்தை சில வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்தபோது, இந்திய அரசின் சுற்றுலா தூதுவர் பட்டத்தை அவரிடம் இருந்து பறிபோனது நினைவுக்கு வருகிறது.