பிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்!

 

பிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்!

பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  அப்போது, இருநாட்டின் தலைவர்களும், பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தனர்.  பிரேசில் நாட்டின் அதிபருடனான சந்திப்பின் போது, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

modi

இந்திய பிரதமரின் இந்த அழைப்பை பிரேசில் நாட்டின் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என்று சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதே போல், பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.