பிரிவு 370, பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மட்டுமே கொடுத்தது : நரேந்திர மோடி

 

பிரிவு 370, பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மட்டுமே கொடுத்தது :  நரேந்திர மோடி

ஜம்மு காஷ்மீருக்குக் காலம் காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை விளக்கும் பிரிவு370க்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது.

ஜம்மு காஷ்மீருக்குக் காலம் காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை விளக்கும் பிரிவு370க்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காகக் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.

Article 370

இந்த அறிவிப்பு, ஜம்மு காஷ்மீரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அதனைத் தடுக்க, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. செல்போன் சேவையும் ஜம்மு காஷ்மீரில் முடக்கப்பட்டதால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

Modi

இன்று சர்தார் வல்லபாய் படேலின் 144 ஆவது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள படேலின் சிலைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின், அந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370, இதுவரை பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு கொடுத்தது என்று கூறினார். மேலும், பல சகாப்தங்களாக  இந்த பிரிவு ஜம்மு காஷ்மீருக்கான ஒரு செயற்கை சுவரை அமைத்திருந்தது. இப்போது அந்த சுவர் இடிக்கப்பட்டது என்றும்  கூறியுள்ளார்.