பிரியா பவானிசங்கரின் மா(ன்)ஸ்டர் ஸ்ட்ரோக்

 

பிரியா பவானிசங்கரின் மா(ன்)ஸ்டர் ஸ்ட்ரோக்

சினிமாவிலோ விளையாட்டிலோ பிரபலமாக இருக்கும்போது, அத்துறை சார்ந்து வரும் பிரச்னைகளைவிடவும், இந்த ரசிகர்களின் அன்புத்தொல்லை பெரும் தொல்லையாகி போய்விடும். அதுவும் இந்த சமூக வலைத்தளங்கள் வந்தபின், இது ஒரிஜினல் அக்கவுன்ட்தானா இல்லை யாரேனும் ரசிகர்களின் கைவரிசையா என்பதை கண்டறிவது கடினம். சமூக வலைதளங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகள் துவங்கி, அவர்கள் பெயருக்கு கெட்டப்பெயர் வாங்கி கொடுத்து, கோர்ட், கேஸ் வரைக்கும் போன கதைகள் எல்லாம் உண்டு.

priya

நம்ம கதைக்கு வருவோம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து, ஸ்லோவாக ஆனால் ஸ்டெடியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு  மேற்படி ஃபேக் அக்கவுன்ட்டால் ஒரு பிரச்னை. இந்த போலி கணக்கு வைத்திருக்கும் அந்த ரசிகன்/ரசிகை, பிரியா பவானி சங்கர் நடித்து வெளிவந்திருக்கும் மான்ஸ்டர் படத்துக்காக ஆன்லைன் ப்ரோமோவில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருகிறான்/ள்.

priya tweet

இந்த போலி அக்கவுன்ட்டின் அன்புத் தொல்லை எல்லை  மீறவே, ஒரிஜினல் பிரியா ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அன்புள்ள போலி அக்கவுன்ட்டே, உன்னுடைய ஆர்வக்கோளாறு புரிகிறது, அதுக்காக மணிக்கு ஒருமுறை போஸ்ட் போட்டு என்னை அசிங்கப்படுத்தாதே” என போலி அக்கவுன்ட்டை டேக் செய்து ட்வீட் போட்டுவிட்டார். சேர்த்து வச்சிருந்த மொத்த ஃபாலோயர்ஸும் பிச்சிக்கிட்டு போகப்போறாய்ங்க போலியிடமிருந்து.