பிரியாணி ஒட்டாமல் உதிர் உதிராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? ட்ரைப் பண்ணி பாருங்க!

 

பிரியாணி ஒட்டாமல் உதிர் உதிராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? ட்ரைப் பண்ணி பாருங்க!

சமையலில் கைப்பக்குவம் ரொம்ப முக்கியம் என்றாலும், பிரியாணி செய்வது ஒரு சிலருக்கு தான் நன்றாக வரும். என்ன தான் சமையலில் எக்ஸ்பர்ட்டாக இருந்தாலும் பிரியாணி என்று வரும் போது பல சமயங்களில் சொதப்பி விடும். பிரியாணி நன்றாக வருவதற்கு ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். முதலில் பிரியாணி அரிசி (பாசுமதி )வாங்கும் போது பழைய அரிசியா என்று பார்த்து கேட்டு வாங்க வேண்டும்.

சமையலில் கைப்பக்குவம் ரொம்ப முக்கியம் என்றாலும், பிரியாணி செய்வது ஒரு சிலருக்கு தான் நன்றாக வரும். என்ன தான் சமையலில் எக்ஸ்பர்ட்டாக இருந்தாலும் பிரியாணி என்று வரும் போது பல சமயங்களில் சொதப்பி விடும். பிரியாணி நன்றாக வருவதற்கு ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். முதலில் பிரியாணி அரிசி (பாசுமதி )வாங்கும் போது பழைய அரிசியா என்று பார்த்து கேட்டு வாங்க வேண்டும். புதிய அரிசியைப் பயன்படுத்தி பிரியாணி சமைத்தால் குழைந்து விடும். அப்புறம் பிரியாணி பார்ப்பதற்கு பிஸிபேலாபாத் மாதிரி (அதாங்க… குழைய வைத்த சாம்பார் சாதம்)  ஆகி விடும். பழைய அரிசி விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பிரியாணி செய்வதற்கு நன்றாக இருக்கும். பிரியாணியின் அளவும் கூடுதலாக இருக்கும். 

briyani

பழைய அரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் தண்ணீர் வைக்க வேண்டும். புதிய அரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் விட வேண்டும். நாம் சேர்த்து வதக்கும் மசாலா வகைகள் அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி கெட்டியாக இல்லாமல் குழம்பு போல் இருந்தால் தண்ணீரின் அளவில் கால் கப் தண்ணீரைக் குறைத்து கொள்ள வேண்டும்.
குக்கரில் வைப்பதாக இருந்தல் ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து சிம்மில் வைத்து 3 நிமிடத்தில் அணைத்து விட வேண்டும். பிரஷர் போனதும் குக்கரைத் திறந்து கவனமாக மெதுவாக கலந்து விட வேண்டும். பிரியாணி நன்கு உதிர் உதிராக இருக்கும்.
குக்கரில் வைக்காமல் தம் பிரியாணி என்றால் அடி கனமான பாத்திரத்தில் முதலில் மசாலாவை வதக்கி தண்ணீர் ஊற்றி, அது கொதித்ததும் அரிசியை கழுவி தண்ணீரை நன்கு வடித்து விட்டு மசாலாவில் சேர்க்க வேண்டும். நன்கு  கிளறி விட்டு தண்ணீர் சுற்றிலும் நன்கு சேர்ந்து வந்ததும் தீயைக் குறைத்து பாத்திரத்தை மூடி அதன் மேல் கனமான பொருள் ஏதாவது வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். சிம்மிலேயே 10 நிமிஷம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.  தம் பிரியாணி சூப்பராக வெந்து உதிர் உதிராக இருக்கும். 10நிமிடங்களுக்கு மேல் அடுப்பில் இருந்தால் வேர்த்து அந்த தண்ணீர் பிரியாணியிலேயே விழுந்து சாதம் குழைந்து போகும் அபாயம் உண்டு.