பிரியாணியில் கிராம்பு இருந்தால் தூக்கிப் போடாதீங்க! 

 

பிரியாணியில் கிராம்பு இருந்தால் தூக்கிப் போடாதீங்க! 

நறுமணம் கமழும் பிரியாணியை நல்ல பசியில் ஒரு பிடி பிடிக்கிறோம். அசைவ உணவைப் பார்த்தாலே நம் வயிறு, அதன் கொள்ளிடத்தை இன்னும் சற்று விரிவடைய செய்துக் கொள்கிறது. ஆனால், வாய்க்கு ருசியாக சாப்பிடும் போது, அப்படி உணவுக்கு ருசி தருகிற பொருட்களைப் பற்றியெல்லாம் நாம் கண்டுக் கொள்வதே கிடையாது.

பிரியாணியில் கிராம்பு இருந்தால் தூக்கிப் போடாதீங்க! 

நறுமணம் கமழும் பிரியாணியை நல்ல பசியில் ஒரு பிடி பிடிக்கிறோம். அசைவ உணவைப் பார்த்தாலே நம் வயிறு, அதன் கொள்ளிடத்தை இன்னும் சற்று விரிவடைய செய்துக் கொள்கிறது. ஆனால், வாய்க்கு ருசியாக சாப்பிடும் போது, அப்படி உணவுக்கு ருசி தருகிற பொருட்களைப் பற்றியெல்லாம் நாம் கண்டுக் கொள்வதே கிடையாது. மசாலாக்களின் சுவைக்கு என்று பயன்படுத்தும் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை என்று பார்த்து பார்த்து, அவற்றையெல்லாம் தேடிப்பிடித்து எடுத்து ஓரம் வைத்து விடுகிறோம். அளவில் சிறியதாக இருந்தாலும் சமையலில் பயன்படுத்தப்படும் கிராம்பின் வீரியம் அதிகம். மனித உடலுக்கு பல்வேறு பயன்களை கிராம்பு அளிக்கிறது. 

சித்த மருத்துவத்திலும், சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம்.சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பத்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கிராம்பின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களோடு உள்ளன .இதை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக அமைகிறது. 
 பசியை தூண்ட 
சிலருக்கு சிறிதளவு உணவு உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது .மேலும் இவர்களுக்கு பசியும் இருக்காது.இவர்கள் தினமும் சிறிதளவு கிராம்பு சேர்த்துக்கொண்டால் செரிமானமும் அதிகரிக்கும் பசியையும் தூண்டும். 
வறட்டு இருமல்
கிராம்பு பொடியுடன் பனங்கர்கண்டு சேர்த்து காய்ச்சிய பாலில் கலந்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கிவிடும்.

தலைபாரம் நீங்க
கிராம்பை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மேலும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலை பாரம் குறையும். 
பித்தம் குறைய
வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை வைத்து தான் உடலின் செயல்பாடுகள் அமைந்துள்ளன .இவற்றில் ஒன்றின் நிலை மாறினாலும் உடலில் பாதிப்பு ஏற்படும். இவற்றில் அதிகம் நிலை மாறுவது பித்த நீரில் தான். பித்தம் அதிகம் ஆனால் உடலில் பல நோய்கள் உண்டாகும். தினமும் ஒரு கிராம்பு உண்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
பல் வலி நீங்க
கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.சொத்தை பல் பிரச்சினைக்கும் கிராம்பே தீர்வாக அமைகிறது.
வாந்தி நிற்க
பேரூந்தில் பயணம் செய்யும் போது கிராம்பை வாயில் போட்டு மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி எடுப்பதை தவிர்க்கலாம்.
வாய் புண் குணமாக
வயிற்றில் புண் இருந்தால், வாயிலும் புண் உண்டாகும். கிராம்பை அரைத்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
தொண்டை புண் ஆற
கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டை புண் குணமாகும்.
தோல் படை நீங்க
கிராம்பை நீர் விட்டு அரைத்து, படைகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் தோலில் உண்டான படை மறைந்து போகும்.

உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவுகிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். 3 முதல் 5 துளிகள் வரையில்  நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.  கிராம்பை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குடித்து வத்நால், வயிற்று உப்புசம் உடனே நீங்கும். வெதுவெதுப்பான நீரில் கிராம்பு போட்டு அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதனை தினமும் 2-3 முறை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பாலுணர்வை தூண்டும் சிறப்பான பொருள் எனலாம். இதற்கு அதன் நறுமணம் தான் முக்கிய காரணம். இந்த நறுமணத்தினால், புத்துணர்வு கிடைத்து, நன்கு செயல்பட முடியும். மன அழுத்தத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அதில் இருந்து நிவாரணம் கிடைக்க, கிராம்பு, புதினா, துளசி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு நல்ல தேநீர் செய்து தேன் சேர்த்து கலந்து குடித்தால், மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.