பிரியங்கா சோப்ரா போடுற போஸ்ட்க்கு லைக்ஸ் அள்ளுதோ இல்லையோ… அவரு பர்ஸ் நிறையுது!!

 

பிரியங்கா சோப்ரா போடுற போஸ்ட்க்கு லைக்ஸ் அள்ளுதோ இல்லையோ… அவரு பர்ஸ் நிறையுது!!

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கியெடுக்கும் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டுக்கு ஒரு கோடியே 86 லட்சம் வாங்குகிறார். கிரிக்கெட்டில் ரன் மிஷின் கோலி, ஒரு போஸ்ட்டுக்கு ஒரு கோடியே 35 லட்சம் வாங்குகிறாராம்.

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். பாலிவுட்டில் பிரபலமான் ஹீரோ ஹீரோயின்களுக்கு நின்றால் காசு நடந்தால் காசு. கடைதிறப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, பிக் பாஸ் வாய்ப்பு என எல்லாவற்றிலும் காசுபார்க்க வாய்ப்புண்டு. சமூக வலைதளங்களில் அவர்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுவதால், அவர்களை வைத்தும் சுலபமாக காசு பார்க்கிறார்கள். விளம்பர நிறுவனங்களின் பதிவுகளை தங்கள் பக்கங்களில் பதிவு செய்வதற்கு கோடிகணக்கில் சம்பளம் பெறுபவர்கள் உண்டு.

Virat Kohli

தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குள் மட்டும் செயல்படுகிற பிரபலங்கள், ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லட்சங்களில் வாங்குகிறார்கள். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கியெடுக்கும் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டுக்கு ஒரு கோடியே 86 லட்சம் வாங்குகிறார். கிரிக்கெட்டில் ரன் மிஷின் கோலி, ஒரு போஸ்ட்டுக்கு  ஒரு கோடியே 35 லட்சம் வாங்குகிறாராம்.