பிரியங்கா சோப்ரா புது வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! 

 

பிரியங்கா சோப்ரா புது வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! 

நிக் ஜோன்ஸ்க்கு சொந்தமான அந்த வீட்டில் ஐந்து படுக்கை அறைகள், ஐந்து குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம் என்று அந்த வீட்டின் மதிப்பு 50 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மிகவும் பிரம்மாண்ட வசதிகளைக் கொண்ட அந்த வீட்டை நிக் ஜோன்ஸ் தற்போது விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையேடு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார்.

நிக் ஜோன்ஸ்க்கு சொந்தமான அந்த வீட்டில் ஐந்து படுக்கை அறைகள், ஐந்து குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம் என்று அந்த வீட்டின் மதிப்பு 50 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மிகவும் பிரம்மாண்ட வசதிகளைக் கொண்ட அந்த வீட்டை நிக் ஜோன்ஸ் தற்போது விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

priyanka

அது ஏனென்றால் அந்த வீட்டை விட தற்போது ஒரு பெரிய வீட்டிற்குள் இருவரும் செல்லவுள்ளார்களாம் . தற்போது மீண்டும் அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ரூ.140 கோடி மதிப்பில் ஒரு புதிய விடு வாங்கவுள்ளதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளனர். அந்த வீட்டில் அலங்கார வேலைப்பாடுகள் செய்ய யோசித்துள்ளதால் அடுத்த வருடம் இந்த ஜோடி அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யவுள்ளார்களாம். இவர்களின் புது வீடு மதிப்பை கேட்ட நெட்டிசன்கள் வாய்ப்பிளந்துள்ளனர்.