பிரியங்கா காந்தியின் இலக்கு இதுதான்… ராகுல் காந்தி விளக்கம்

 

பிரியங்கா காந்தியின் இலக்கு இதுதான்… ராகுல் காந்தி விளக்கம்

அரசியலில் களமிறங்கி இருக்கும் பிரியங்கா காந்தியின் இலக்கு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

லக்னோ: அரசியலில் களமிறங்கி இருக்கும் பிரியங்கா காந்தியின் இலக்கு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா காந்தி கிழக்கு உத்தரபிரதேச மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதுவரை நேரடி அரசியலில் குதிக்காமல் இருந்த பிரியங்கா காந்தி தற்போது அரசியலில் குதித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், 

பிரியங்கா காந்திக்கும், மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் சிந்தியாவுக்கும் ஒரு இலக்கு கொடுத்திருக்கிறேன். அடுத்து உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்து, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதுதான் அது. குஜராத்தோ, உத்தரபிரதேசமோ, தமிழ்நாடோ அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் முழுசக்தியுடன் முன்னணியில் இருந்து போராடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அரசை நீங்கள் பார்ப்பீர்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் எந்த பின்னடைவும் இல்லாமல் முழுசக்தியுடன் போட்டியிடும் என்றார்.