பிரியங்கா காந்தியா? சோப்ராவா? காங்கிரஸ் மேடையில் கன்ப்யூஸ் ஆன முன்னாள் எம்எல்ஏ !

பிரியங்கா காந்தியா? சோப்ராவா? காங்கிரஸ் மேடையில் கன்ப்யூஸ் ஆன முன்னாள் எம்எல்ஏ !

கட்சியின் தலைமையில் இருப்பவர்களின் பெயர்கள் கூட தெரியாத சில பிரமுகர்களால் சமூக வலைதளங்களில் கேலிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காந்தி என்பதற்கு பதில் சோப்ரா என பிரமுகர் முழங்கியதால் தொண்டர்கள் முகம் சுளித்துள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்ப்டடிருந்தது. இந்த கூட்டத்தில் முன்னாம் எம்எல்ஏ சுரேந்திரகுமார், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

surendarkumar

பின்னர் அனைவரும் பேசி முடித்தவுடன் வழக்கம்போல் நன்றி தெரிவிப்பதற்காக சுரேந்திரகுமார் வந்து நின்றார். அப்போது அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு பிரியங்கா சோப்ரா வாழ்க என கோஷம் எழுப்பினார். அங்கிருந்தவர்கள் ஒருநிமிடம் ஆடி போய்விட்டனர். தலைவர் ஏன் இப்படி பேசுகிறார்? பிரியங்கா காந்தி என்பதற்கு பதிலாக, பிரியங்கா சோப்ரா என்கிறாரே என முகம் சுளித்தனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட சுரேந்திரகுமார் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார்.

chopra

இதுகுறித்து சமூகவலைதளவாசிகள், அகாலிதள கட்சியின் எம்.எல்.ஏ. மஞ்ஜிந்தர் சிங், “காங்கிரஸ் கட்சியின் பொதுகூட்டங்களில் பிரியங்கா சோப்ரா வாழ்க என்று கூறிவருகிறார் ” என பதிவிட்டிருந்தனர். சுரேந்திர குமாரை பலர் ட்விட்டரில் கலாய்த்துவருகின்றனர்.காங்கிரஸ் பொதுகூட்டம்2017ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட சுரேந்திர குமார், ஆம் ஆத்மி கட்சியின் ராம் சந்தரிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தலைவர்கள் சிலர் தவறாக பேசும்போது வேண்டுமென்றே தான் பிரபலம் அடைவதற்காக பேசுகிறார்களா? காரணம் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு தலைமையில் உள்ள பெயர்களை தவறாக உச்சரிக்கும் வகையில் பேசுவதற்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.