பிரியங்கா காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை நினைத்தாலே பயமாக்கு இருக்கு….. சத்ருகன் சின்ஹா

 

பிரியங்கா காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை நினைத்தாலே பயமாக்கு இருக்கு….. சத்ருகன் சின்ஹா

உத்தரப் பிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தின் மகளான பிரியங்கா காந்தியை போலீசார் கையாண்ட விதத்தை பார்க்கும்போது, சாமானிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பார்க்கவே போது பயமாக இருக்கிறது என காங்கிரசின் சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் மாலையில் பிரியங்கா காந்தி, குடியுரிமை  திருத்த சட்டத்துக்கு எதிரனா போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபூரி வீட்டுக்கு சென்றார். அப்போது பெண் காவலர்கள் பிரியங்காந்தியை தடுத்து நிறுத்தினர். அப்போது பெண் காவலர்கள் தன் கழுத்தை பிடித்ததாகவும், தள்ளியதாகவும் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டினார். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தியிடம் பெண் போலீசார் நடந்து கொண்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் வெளிப்படைய செய்தி தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியை பார்க்க செல்லும்போது காந்தி-நேரு குடும்பத்தின் மகள் பிரியங்கா காந்தியிடம் போலீசார் தவறாக நடந்துள்ளனர். மகளுக்கு கல்வி மகளை பாதுகாப்போம் என நீங்கள் அடிக்கடி கூறும் வாசகம், போதனை மற்றும் பிரசங்களுக்கும் முரணாக இது உள்ளது. 

மோடி

உங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி உத்தரப் பிரதேச போலீசார் வெட்கக்கேடான முறையில் பிரியங்கா காந்தியை கையாண்டனர். இது மிகவும் கண்டிக்தக்கது. காந்தி-நேரு குடும்ப மகளுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.