பிரிந்து சென்ற கணவரோடு சேர்த்துவைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி! பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை !!

 

பிரிந்து சென்ற கணவரோடு சேர்த்துவைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி! பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை !!

கணவரோடு சேர்த்து வைப்பதாகக் கூறி பழகிய நபர், பாலியல் ரீதியில்  துன்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணவரோடு சேர்த்து வைப்பதாகக் கூறி பழகிய நபர், பாலியல் ரீதியில்  துன்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்களை ஏமாற்றும் நபர்கள் எல்லாம் கடைசியில் காவல்துறையின் பிடியில் சிக்கிவிடுவார்கள், ஆனால் அந்த காவல்துறையில் பணிபுரிபவரையே நம்ப வைத்து ஏமாற்றியதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கணவனைப் பிரிந்து 9 ஆண்டுகளாக தனித்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைப்பதாக பெண் காவலருக்கு உறுதியளித்ததோடு, கனிவாகவும் பேசி ஆறுதல் அளித்துள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதுவும் வேண்டாம் என அறிவுரை கூறிய பூமிநாதன், மாந்திரீகத்தின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் எனவும் கூறியுள்ளார். அதற்காக பெண் காவலரிடம் கொஞ்சம் கொஞ்சமாக 1 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பெண் காவலரை தொடர்பு கொண்ட பூமிநாதன், கேரளாவில் இருந்து மந்திரவாதி ஒருவரை மதுரைக்கு வரவழைத்திருப்பதாகவும், கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றால், அதற்குப் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய பெண் காவலர், பூமிநாதனுடன் கார் ஒன்றில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார். பூஜைப் பொருட்களை வாங்கிய பின்னர், அந்தக் கேரள மந்திரவாதி தன் மீது மை ஒன்றை பூசியதாகவும், அதில் தான் சுய நினைவை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார், அந்த பெண் காவலர். நினைவு திரும்பியபோது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்ததாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பூமிநாதன், அவரின் நண்பர் ஆறுமுகம், சாமியார் ஜோதி ஆகியோர் மீது, பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.