பிரித்தாளும் தலைவரா? நானா…. மோடியின் நாசுக்கான பதில்!

 

பிரித்தாளும் தலைவரா? நானா…. மோடியின் நாசுக்கான பதில்!

பிரித்தாளும் தலைவர் மோடி என டைம் பத்ரிகை அட்டைப்பட கட்டுரை வெளியிட்டது நினைவிருக்கலாம். தேர்தல் பரப்புரையின்போது வெளியான இந்த வெளிநாட்டு பத்திரிகையின் கட்டுரை பரபரப்பாக பேசப்பட்டது.  ஆனால் பரப்புரை முடிந்த பிறகு இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி,டைம் பத்திரிக்கை ஒரு வெளிநாட்டு பத்திரிக்கை. கட்டுரையை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார், அந்த கட்டுரையின் நம்பகத்தன்மைக்கு இதுவே சான்று’ என பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இப்போது பாஜக டைம் பத்ரிகைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் கருணா கோபால் கூறும்போது “பிரதமர் மோடியை பிரித்தாளும் தலைவர் என திரித்து கூறி பிரசுரமான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். மோடி பிரிவினைவாதி அல்ல, ஒருங்கிணைப்பவர், நல்லிணக்கவாதி, மோடியின் அணுகுமுறையால் அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட அவரை முழுமனதாக ஏற்றுக்கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

 மேலும், ஒருசில பத்ரிகையாளர்கள்தான் மோடி வெறுப்பு மனநிலையில் இப்படி இருப்பதாகவும், டைம் பத்ரிகையின் இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கோபால் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்துறதுதான் நடத்துறீங்க, டைம் பத்ரிகை ஆபிஸ் எங்க இருக்குன்னு பாத்து நடத்துங்க, முன்னாடி ஒருதடவை பத்மாவதி படத்துக்கு எதிரா போராட்டம் நடத்துறேன்னு சொல்லிட்டு பாகமதி படம் ஓடுன தியேட்டருக்கு முன்னாடி நின்னு கூவுன மாதிரி ஆகிடப்போகுது.