பிரிட்டன் பிரதமர் தெரசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

 

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது

லண்டன்: பிரிட்டன் பிரதமர் தெரசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.

பிரெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதா? வேண்டாமா? என்ற பொதுமக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் முடிவுகளில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து 52 சதவீத மக்களும், அதில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து 48 சதவீத மக்களும் வாக்களித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என விரும்பிய பிரிட்டனின் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் வெளியேற முடிவு செய்து அதற்கானத் திட்டத்தை முன்வைத்த தெரசா மே பிரதமரானார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் வருகிற மார்ச் 29-ம் தேதி வெளியேற வேண்டும். இதனிடையே, பிரிட்டன் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரெக்ஸிட் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், 432 எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்தனர். 202 பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் வெளியேறுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதையடுத்து தெரேசா மே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஜெரேமி கார்பைன் கொண்டு வந்தார். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பும் விவாதமும் அந்நாட்டு நாடளுமன்றத்தில் நடைபெற்றது. அதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் பிரதமராக தெரசா மே தொடர்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய சொந்த விருப்பங்களை மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பிரெக்ஸிட் விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என தெரசா மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.