பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை மூலம் கொரோனா பரவுகிறதா? : அமைச்சர் பதில்!

 

பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை மூலம் கொரோனா பரவுகிறதா? : அமைச்சர் பதில்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு 50 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. அனைத்து நாடுகளும் தங்கள் மக்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முறையான மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்த வைரஸ் திடீரென எப்படிப் பரவியது என்று மக்களிடையே கேள்விகள் எழுந்து வந்த நிலையில், கோழி  இறைச்சி மூலமாகத் தான் பரவுகிறது என்று வதந்தி பரவ ஆரம்பித்தப்பின. இதனால் இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

ttn

இந்நிலையில் புதுக்கோட்டை திருவப்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. அதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 2% சதவீதம் பேர் தான் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், பிராய்லர் கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா வராது என்றும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வதந்திகள் பரப்ப வேண்டாம்.” என்று கூறினார்.