பிராய்லர் கோழியை ஏரியில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்! சமைத்து சாப்பிட்ட மக்கள்… 

 

பிராய்லர் கோழியை ஏரியில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்! சமைத்து சாப்பிட்ட மக்கள்… 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மூலமாக பரவுவதாகவும், அதனால் யாரும் சிக்கன் சாப்பிட வேண்டாம் எனவும் வாட்ஸ்அப்பில் சில நாட்களாக வதந்தி தகவல்கள் பரவி வருகிறது.

egg

இதனால் தமிழகத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. மதுரையில் பெரும்பாலான பிரியாணி கடைகளில் விற்பனை சரிந்ததன் காரணமாக, ரூ.100க்கு விற்பனையான பிரியாணி தற்போது ரூ.70க்கு விற்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரியாணி விலை 50 % சலுகைகளுடன் விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் 10 முட்டை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். 

hen

இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த கீழ்குப்பம் மற்றும் உடையாமுத்தூர் ஏரிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம நபர்கள் சிலர் வீசிச்சென்றுள்ளனர். அதனை கண்ட அப்பகுதி மக்கள் கோழியை பிடித்துச்சென்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். மர்மநபர்கள் விட்டுச்சென்ற கோழிகள் நோய்வாய்பட்டவையா என ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.