பிராய்லர் கோழிகள் பற்றிப் பரவும் கருத்துக்கள் எல்லாம் வதந்தி : உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

 

பிராய்லர் கோழிகள் பற்றிப் பரவும் கருத்துக்கள் எல்லாம் வதந்தி : உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

தீவனங்களில் மருந்து கலப்பதாகவும் அந்த மருந்து கோழிகளுக்கு ஏற்றுக் கொள்ளாமல் அவைகளுக்கு கேன்சர் வந்துவிடதாகவும் செய்திகள் வெளியாயின.

ஊசி போட்டு 45 நாட்களில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை 20 நாட்களில் வளர்ப்பதற்காக, கோழிகளுக்குக் கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும் அந்த மருந்து கோழிகளுக்கு ஏற்றுக் கொள்ளாமல் அவைகளுக்கு கேன்சர் வந்துவிடதாகவும் செய்திகள் வெளியாயின.

ttn

அந்த கேன்சர் வந்த கோழிகளை மற்ற கோழிகளுடன் இணைத்து விற்பனைக்கு அனுப்பி வருவதாகவும், இதனால் 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்க வேண்டாம் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல்கள் பரவி வந்தன. 

minister

உடுமலை அருகே இன்று 8,30,000 நாட்டுக் கோழிகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு வழங்கினார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் தகவல் தவறானது என்றும் இதனால் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், கோழிகளுக்கு நோய் தாக்குதல் குறித்து இதுவரை எந்த புகாரும் எழவில்லை என்று தெரிவித்துள்ளார்.