பிராமண சமூகத்தினர் ‘ஏ1’ திரைப்படத்தைப் புறக்கணியுங்கள்: பிராமணர் சங்கம் அறிக்கை!

 

பிராமண சமூகத்தினர் ‘ஏ1’ திரைப்படத்தைப் புறக்கணியுங்கள்: பிராமணர் சங்கம் அறிக்கை!

ஏ1 நடிகர் சந்தானத்திற்குத் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை:  ஏ1 நடிகர் சந்தானத்திற்குத் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

santhanam

நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள  ஏ1  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது  ‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி’ ‘மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,’ காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன் என்றும், காட்சிகள் இடம் பெற்றன. இதனால்  ஏ1  திரைப்படம் பிராமணர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

a1

இந்நிலையில்,  நடிகர் சந்தானத்திற்கு எதிராகப் பிராமணர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  சமூகவலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளான காட்சிகள் குறித்து நடிகர் சந்தானம் பேசியிருப்பது பிராமண சமூகத்தினரது உணர்வைப் புண்படுத்தியுள்ளது. எனவே பிராமண சமூகத்தினர் அனைவரும் இந்த திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்த  நடிகர் சந்தானம், காமெடி காட்சிகளை உருவாக்குவதற்குச் சுதந்திரம் வேண்டும். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதுபோன்ற காட்சிகள் அமைக்கப்படவில்லை என்றார்.

case

முன்னதாக இப்படம் தொடர்பாக இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.