பிரான்ஸ் நாட்டில் மர்ம காய்ச்சலால் 26 பேர் பலி – மேலும் 810 பேருக்கு பாதிப்பு

 

பிரான்ஸ் நாட்டில் மர்ம காய்ச்சலால் 26 பேர் பலி – மேலும் 810 பேருக்கு பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் மர்ம காய்ச்சல் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் மர்ம காய்ச்சல் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் மர்ம காய்ச்சல் பரவுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 810 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வாரத்தில் அனைத்து முக்கிய பெரிய நகரங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களில் 15 வயதிற்குட்பட்டோர் 3 குழந்தைகள், 15-64 வயதுடையவர்களில் 12 பேர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 பேரும் அடங்குவார்கள்.