பிரான்ஸில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு

 

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2715 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 52 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒரேநாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த மூன்று வாரங்களிலேயே நேற்றைய பலி எண்ணிக்கை தான் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ttn

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் புதியதாக மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த பெண் ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜெரோம்சாலமன் கூறியுள்ளார். அதேபோல இத்தாலியில் இருந்து வந்த நபரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.