பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது

 

பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது

பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது.

பாரிஸ்: பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 16 லட்சத்து 99  ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

france

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,197-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்து 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் 987-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 124,869 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.