பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்!

 

பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்!

பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் விஜய் மல்லையா. அவரை இந்தியா அழைத்துவர சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் மல்லையாவின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதனால் கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கிய மல்லையா பிரிட்டனில் வசிக்கிறார். விஜய் மல்லையாவுக்கு பல்வேறு நாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்!

இந்நிலையில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பிரான்சில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. கடன் ஏய்ப்பு விவகாரத்தில் பிரான்சில் உள்ள ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.