பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு… பீகாரில் அதிரடி!

 

பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு… பீகாரில் அதிரடி!

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தேர்தல் வியூகம் வகுப்பாளராக பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கிஷோர் கருத்து வெளியிட்டிருந்தது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்குள் சர்ச்சையை கிளப்பியது

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கை பீகார் போலீஸ் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தேர்தல் வியூகம் வகுப்பாளராக பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கிஷோர் கருத்து வெளியிட்டிருந்தது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்குள் சர்ச்சையை கிளப்பியது. மேலும், பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வீழ்ச்சிக்கு பிரஷாந்த் கிஷோரின் வியூகம் காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கட்சியிலிருந்து பிரஷாந்த் கிஷோர் வெளியேறினார். பிரஷாந்த் கிஷோரை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

prashant kishore

இந்த சூழ்நிலையில் பீகாரில் பிரஷாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சஷ்வாத் கவுதம் என்பவர் தன்னுடைய ஐடியாவை திருடி பாத் பீகார் கி என்ற பிரசாரத்தை பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில் நானும் ஒசாமா என்பவரும் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கியிருந்தோம். இதை பிரஷாந்த் கிஷோருக்கு அளித்திருந்தோம். அதை அவர் எங்கள் அனுமதியின்றி பயன்படுத்திக்கொண்டார் என்று கூறியுள்ளனர். 
இந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் சிறந்த 10 மாநிலங்களுள் ஒன்றாக பீகாரை முன்னேற்றுவது, பீகாருக்கு புது இளம் தலைவரைக் கொண்டுவருவது இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக பீகார் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பிரஷாந்த் கிஷோர் 100 நாட்கள் பீகார் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.