பிரஷாந்த் கிஷோருக்கு போட்டியாக புதிய நிறுவனத்தைக் களமிறக்கும் அ.தி.மு.க! 

 

பிரஷாந்த் கிஷோருக்கு போட்டியாக புதிய நிறுவனத்தைக் களமிறக்கும் அ.தி.மு.க! 

2014ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்க பிரஷாந்த் கிஷோரின் நிறுவனமும் மிக முக்கிய காரணம். அதன் பிறகு பிரஷாந்த் கிஷோர் ஒதுக்கப்பட்டார். அவர் மோடிக்கு எதிராக வேலை செய்துவந்தார். பீகார், ஆந்திரபிரதேசம், பஞ்சாப், டெல்லி என்று பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியைத் தழுவ காரணம் ஆனார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகம் அமைப்பது உள்ளிட்டவற்றை செய்ய பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்று ஒரு நிறுவனத்தை அ.தி.மு.க-வுக்கும் இறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
2014ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்க பிரஷாந்த் கிஷோரின் நிறுவனமும் மிக முக்கிய காரணம். அதன் பிறகு பிரஷாந்த் கிஷோர் ஒதுக்கப்பட்டார். அவர் மோடிக்கு எதிராக வேலை செய்துவந்தார். பீகார், ஆந்திரபிரதேசம், பஞ்சாப், டெல்லி என்று பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியைத் தழுவ காரணம் ஆனார். அதே நேரத்தில் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றார் என்று கூற முடியாது. டெல்லியில் இவர் வியூகம் தோல்வியைத் தழுவியது.

eddapadi.jpg

இவரைத் தமிழக கட்சிகள் தங்கள் பக்கம் முழுக்க முயற்சி செய்தன. இதில் தி.மு.க வெற்றி பெற்றது என்று கூறப்படுகிறது. பிரஷாந்த் கிஷோரின் வருகையால் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கொஞ்சம் ஆடிப்போயுள்ளன. குறிப்பாக அ.தி.மு.க தங்களுக்கும் இதுபோன்று ஒரு நிறுவனம் பணியாற்றினால் பக்கபலமாக இருக்கும் என்று கருதுகிறது. இதற்காக முன்பு தி.மு.க-வுக்காக பணியாற்றி வந்த சுனிலை தொடர்பு கொண்டனர். ஆனால், பிரஷாந்த் கிஷோருக்கு இணையாகப் பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வேறு ஒரு நிறுவனத்திடம் அ.தி.மு.க மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. டெமோஸ் என்ற நிறுவனம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்களை அந்த நிறுவனம் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தி.மு.க, அ.தி.மு.க போட்டிப் போட்டுக்கொண்டு செயல்பட ஆரம்பித்திருப்பது எங்குபோய் முடியுமோ என்று தெரியவில்லை என்று இரு கட்சித் தொண்டர்களும் புலம்புகின்றனர்.