பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பதால் என்னென்ன பலன்கள்..!

 

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பதால் என்னென்ன பலன்கள்..!

பண்டைய இந்து மதம் ஆன்மிகத்தோடு ஒழுக்கத்தையும் சேர்த்தே நமக்கு கற்றுக் கொடுத்தது. ஆன்மிகத்திற்கு மன ஒழுக்கம் மட்டுமே போதாது என்று அதன் அடிப்படைகளின் ஒவ்வொரு செயல்களிலும் உடல் ஒழுக்கத்தையும் சேர்த்தே போதித்து வந்திருக்கிறது.

பண்டைய இந்து மதம் ஆன்மிகத்தோடு ஒழுக்கத்தையும் சேர்த்தே நமக்கு கற்றுக் கொடுத்தது. ஆன்மிகத்திற்கு மன ஒழுக்கம் மட்டுமே போதாது என்று அதன் அடிப்படைகளின் ஒவ்வொரு செயல்களிலும் உடல் ஒழுக்கத்தையும் சேர்த்தே போதித்து வந்திருக்கிறது. அதனால் தான் அதிகாலை நேரத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெரியவர்கள் பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறார்கள். 
நமது சாஸ்திரங்கள் மட்டுமல்லாது, விஞ்ஞானமும் அதிகாலை வேலையில் எழுந்திருப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று சொல்கிறது. நமது பேராசையினாலும், சுயநலத்தினாலும், சோம்பேறித்தனத்தாலும் ஓசோன் மண்டலத்தை கிழித்து பகல் முழுவதும் தூசு மண்டலத்தையும், டீசல் புகையையும் சுவாசித்து நுரையீரலை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். 
பொதுவாகவே, அதிகாலைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த சக்தி வாய்ந்த கதிர்கள் நமது உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. அதிகாலைச் சூரியனின் கதிர்கள் கண்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. நம் உடலும் வலிமைப் பெறுகிறது. அதனால் தான், யோகா கலையில் பிரதானமாக சூரிய நமஸ்காரம் இருக்கிறது. ஆன்மிகத்திலும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். 

அதிகாலைச் சூரியன்

இழுத்து வைத்து முகத்தில் வழிய வழிய உச்சந்தலையில் வாரமிருமுறை புதன்கிழமையும், சனிக்கிழமையும் நம் முன்னோர்கள் எண்ணெய் தேய்த்து விட்டதெல்லாம் காரணமாகத் தான். இன்று பரட்டைத் தலையே ஃபேஷனாகி விட்டது. சனி நீராடு என்று போகிற போக்கில் அவர்கள் சொல்லி வைத்ததில் அத்தனை தத்துவங்களும், ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. சனிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண் ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையதும் ஆரோக்கியமானதும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.அதிகாலை நேரத்தில் எழுந்திருப்பதால் உடல் சுறுசுறுப்படைகிறது, ஆரோக்கியத்தை அழைத்து வருகிறது, மன அழுத்தத்தைத் துரத்தி விடுகிறது. அன்றைய  செயல்களைச் செய்வதற்கு பரபரப்பில்லாமல் திட்டமிட அதிகாலை நேரங்களே சிறப்பானவை. குழந்தைகளுக்கு.. காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதி சொன்னது… எட்டு, ஒன்பது மணியையல்ல. இந்த அதிகாலை நேரத்தைத் தான். 

ஆரோக்கியத்தை தருகிறது.

அதிகாலை நேரத்தைப் பற்றிச் சொல்கிற பொழுது, உஷஸ் எனும் பெண் தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற் காலை நேரம் உஷத் காலம் என்றும் அழைக்கப்படு கிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற் காலையில் பூமியை நோக்கிப் பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால் தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி முதல் 5.30 மணிவரையில். அந்த நேரத்தில் நம் மனம், புத்தி எல்லாம் தெளிவாக முழு ஆற்றலுடன் செயல்பட ஆயத்தமாகிறது. பிள்ளைகளிடமும் அதிகாலை துயில் எழுகிற பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்