பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் ‘நடிகையர் திலகம்’?

 

பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் ‘நடிகையர் திலகம்’?

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கும் அடுத்தப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கும் அடுத்தப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ திரைப்படங்களை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நாயகர்களாக நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், ‘நடிகையர் திலகம்’/‘மகாநடி’ திரைப்படத்தின் மூலம் மறைந்த நடிகை சாவித்ரியை கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷுக்கு தமிழை விட தெலுங்கில் பாராட்டுக்கள் குவிந்தன. கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வியந்த ராஜமௌலி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள இப்படத்தின் கதையும் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகிகள் குறித்த அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.