பிரம்மாண்டமான 98 இன்ச் திரை கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்

 

பிரம்மாண்டமான 98 இன்ச் திரை கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்

ரெட்மி பிராண்டின் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: ரெட்மி பிராண்டின் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி பிராண்டின் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சியோமி ரெட்மியின் மிகப்பெரும் டிவி மாடலாக இது வெளியாகி உள்ளது. இதன் திரை பிரம்மாண்டமான 98 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4K ரெசொல்யூஷன் ஹெச்.டி.ஆர் வசதி, மெல்லிய பெசல்களை இது கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இத்துடன் ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. மேலும் டால்பி + டி.டி.எஸ்., 4 யூனிட் பெரிய கேவிட்டி ஸ்பீக்கர் ஆகிய ஆடியோ அம்சங்களை கொண்டிருக்கிறது.

ttn

ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் சிறப்பம்சங்களாக 98 இன்ச் 4K டிஸ்பிளே, 1.9 ஜிகாஹெர்ட்ஸ் அம்லாஜிக் கார்டெக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 டி972 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, பேட்ச் வால், வைஃபை 802.11 ac, ப்ளூடூத் 4.2, ஹெச்.டி.எம்.ஐ, யு.எஸ்.பி, ஈத்தர்நெட், 8வாட் ஸ்பீக்கர், டி.டி.எஸ் ஆடியோ, டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் 98 இன்ச் மாடல் விலை சீனாவில் 19999 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2,15,390) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.