பிரமாண்ட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் இரு கான்கள்?

 

பிரமாண்ட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் இரு கான்கள்?

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிகர் ஷாருக்கானும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிகர் ஷாருக்கானும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 12 வருடங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் ரொமண்டிக் கதையாக திரைப்படம் உருவாகிறது. 2007ல் “சாவரியா” படத்தில் சல்மான் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில்  நடிகர் ஷாருக்கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு கான்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஷாருக்கின் “ஜீரோ” படத்தில் சல்மான் கான் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த புதிய படத்தை 2020 ரம்ஜானில் ரிலீஸ் செய்ய சல்மான் கான் விரும்பம் தெரிவித்துள்ளார். ரம்ஜானில் வெளியான சல்மான் படங்கள் ஹிட்டடித்ததே இதற்கு காரணம்.

பன்சாலியின் “பத்மாவத்” படம் பல கட்ட சட்ட போராட்டங்களை கடந்து வெளிவந்தாலும், கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. எனவே இம்முறை பாலிவுட்டின் இரு கான்களையும் வைத்து ஹிட்டடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் பன்சாலி.