பிரபாஸின் சாஹோ படத்தில் இணைந்த தமண்? 

 

பிரபாஸின் சாஹோ படத்தில் இணைந்த தமண்? 

சாஹோ படத்தில் இசையமைப்பாளராக தமண் இணைந்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சாஹோ படத்தில் இசையமைப்பாளராக தமண் இணைந்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபாஸுக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தயாராகும் இதை அனைத்து திரையுலகிலும் பிரபலப்படுத்தும் விதமாக அந்தந்த திரையுலகை சார்ந்த  நடிகர், நடிகைகளைப் படக்குழுவில் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் ஷங்கர் -எஹசான்-லாய் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று இவர்கள் படத்திலிருந்து வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பதில் இதில் இசையமைப்பாளர் தமண் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

thaman

முன்னதாக படத்தின் புரொமோஷன்களுக்கான பாடலை தமண் உருவாக்கி பிரபாஸ் பிறந்த நாளன்று  வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.