பிரபல ஹோட்டலில் தங்க கட்டிகள் கடத்தல்: 7 கிலோ தங்கம் பறிமுதல்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

பிரபல ஹோட்டலில் தங்க கட்டிகள் கடத்தல்: 7 கிலோ தங்கம் பறிமுதல்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

பிரபல ஹோட்டல் வாகன நிறுத்தத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பிரபல ஹோட்டல் வாகன நிறுத்தத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை மயிலாப்பூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில், ஹவாலாப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அந்த ஹோட்டலைக் கண்காணித்து வந்தனர். நேற்று மாலை ஹோட்டலில் இருந்து ஒரு தொழிலதிபர் கையில் தோல் பையோடு வெளியே வந்தார். அதிகாரிகள் அவரை மடக்கி பையை வாங்கிப் பார்த்தபோது அதில் 6 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொழிலதிபரை விசாரித்தனர்.

smuggling

விசாரணையில், ‘ஹாங்காங்கில் இருந்து கிலோ கணக்கில் தொழிலதிபர் தங்கக் கட்டிகளைக் கடத்தி வருவதும், விமானத்தில் பயணிகள் போல் வரும் நபர்கள் தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்து  தொழிலதிபரிடம் கொடுத்து விட்டு அதற்கு ஏற்ப கமிஷனை வாங்கிக் கொண்டு  சென்று விடுவர். அப்படி தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பேர் ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது.

smuggling

இதையடுத்து ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.தொடர்ந்து சென்னையில் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மேலும் ஒரு கிலோ தங்கமும், தொழிலதிபர் உதவியாளர்களின் வீடுகளில் 6 கோடி ரூபாய் ரொக்கமும் பிடிபட்டன. மொத்தம் 7 கிலோ தங்கம், 11 கோடியே 16 லட்சம் ரூபாய், தங்கம் கடத்த உதவிய கார் ஆகியவை தொழிலதிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. 

தொழிலதிபர், தென்கொரிய நபர்கள், உதவியாளர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 5 பேரை  அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.