பிரபல ஹாலிவுட் நடிகர் தற்கொலை…தற்கொலை செய்து கொள்ளும் வயதா இது!?

 

பிரபல ஹாலிவுட் நடிகர் தற்கொலை…தற்கொலை செய்து கொள்ளும் வயதா இது!?

ஹேங்ஓவர் படத்தின் மூலம் புகழ்பெற்ற பிராடி ஸ்டீவன்ஸ் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 48

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹேங்ஓவர் படத்தின் மூலம் புகழ்பெற்ற பிராடி ஸ்டீவன்ஸ் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 48.

இளைஞர்களைக் கவரும் அடல்ட் காமெடியாக பட்டையை கிளப்பிய படம் ‘ஹேங்ஓவர்’. ப்ரெட்லி கூப்பர், எட் ஹெல்ம்ஸ், ஸக் கலிஃபியானகிஸ், கென் ஜியோங் நடிப்பில் வெளியான இதன் அனைத்து பாகங்களுமே பக்கா ஹிட்.

ஜாலியாக நாலு ஃப்ரெண்ட்ஸ் கிளம்பி அவுட்டிங் செல்ல அங்கு ஓவராக குடித்து போதையில் ஆடியிருப்பார்கள். விடிந்து பார்த்தால் எதுவுமே நியாபகம் இல்லாமல் பல்வேறு பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவர்களைக் கலங்கடிக்கும். கடைசியில் அதை எல்லாம் சரி செய்து படத்தை சுபமாக முடிப்பார்கள். இது தான் ஹேங் ஒவர் படத்தின் வழக்கம்.

இப்படத்தின் முதல் பாகத்தில் ஃபோல்ட்ஸ் எனும் கதாபாத்திரத்தில் போலீஸ் ஆபீசராகவும், இரண்டாம் பாகத்தில் கிங்ஸ்லி-யை சேர்ந்தவராகவும் நடித்த பட்டையை கிளப்பிய காமெடி நடிகர் பிராடி ஸ்டீவன்ஸ், லாஸ் ஏஞ்சல்சில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.

ஜிம்மி கிம்மல் லைவ் உள்ளிட்ட பல தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நடித்து பிரபலமான பிராடி ஸ்டீவன்ஸ் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.