பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை!!

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை!!

விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தேர்வுக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை!!

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தியான் சந்த் விருது உள்ளிட்ட பல உயரிய விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.

விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தேர்வுக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தியான் சந்த் விருது உள்ளிட்ட பல உயரிய விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு இந்த ஆண்டு பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தேர்வு குழுவினால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

இவரை மேரி கோம், பாய்சங் பூட்டியா ஆகியோர் உள்ளடங்கிய 12 பேர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது. 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு மொத்தம் இருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் ஒருவர் பஜ்ரங் பூனியா மற்றொருவரை ஓரிரு நாட்களில் தேர்வுக்குழு அறிவிக்கும் என்கின்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

 அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதிற்கு மேலும் சில வீரர்களை தேர்வுக்குழு அறிவிக்க உள்ளது. பயிற்சியாளர்களில் சிறந்து விளங்கியவர்களுக்கான துரோணாச்சாரியார் விருதிற்கான பெயர்களை மற்றொரு தேர்வுக்குழு தயார் செய்து வருகிறது. இந்த விருதுக்கான பெயர்களும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டதை அறிந்த பஜ்ரங் பூனியா கூறுகையில், கடந்த சில வருடங்களாகவே நான் இந்த விருதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதற்காக முழு தகுதியை நான் பெற்றிருக்கிறேன் என நம்புகிறேன். இந்த ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் இந்த விருது எனக்கு கிடைக்கும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது என்றார். 

தற்போது ஜார்ஜியா நாட்டில் தனது பயிற்சியை எடுத்துக் கொண்டு வரும் பஜ்ரங் பூனியா ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.