பிரபல பாலிவுட் பட ரீமேக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண்!

 

பிரபல பாலிவுட் பட ரீமேக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக பாலிவுட் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக பாலிவுட் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’  படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை  இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கி வருகிறார். ரெபா மோனிகா, முனீஷ் காந்த், பாண்டிய ராஜன் ஆகியோர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

vicky donar

அதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘விக்கி டோனர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. 

இந்நிலையில்,தமிழில் ரீமேக் செய்யவுள்ள இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது .இதை விஷாலின் ‘அயோக்யா’ உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்ட ஸ்கிரீன் ஸீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.